சுடச்சுட

    
    1spt1

    லண்டன், ஆக.9: ஒலிம்பிக் மகளிர் 200 மீ. ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை அலிசன் பெலிக்ஸ் தங்கம் வென்றார்.

     புதன்கிழமை இரவு நடைபெற்ற இப் போட்டியில் பெலிக்ஸ் 21.88 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கத்தைத் தட்டிச் சென்றார். 2004 மற்றும் 2008 ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற பெலிக்ஸ் முதல்முறையாக தங்கம் வென்றுள்ளார்.

     இந்த ஒலிம்பிக்கில் 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் ஷெல்லி-ஆன் பிரேசர் 22.09 விநாடிகளில் இலக்கை எட்டி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மற்றொரு அமெரிக்க வீராங்கனையான கார்மெலிட்டா ஜெட்டர் 22.14 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

     100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றதைப் போலவே, 200 மீ. ஓட்டத்திலும் தங்கம் வெல்ல காத்திருந்த ஷெல்லியின் கனவை பெலிக்ஸ் தகர்த்தார்.

     2004 ஏதென்ஸ் மற்றும் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீ. ஓட்டங்களில் தங்கம் வென்றவரான ஜமைக்காவின் வெரோனிகா கேம்பெல் பிரௌன், இந்த முறை 22.38 விநாடிகளில் இலக்கை எட்டி 4-வது இடத்தையே பிடித்தார். முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இரு முறை தங்கம் வென்ற அவர், இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பையே இழந்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai