சுடச்சுட

  
  spt2

  லண்டன், ஆக.10: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஜெர்மனி-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

   வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்து அணி 9-2 என்ற கணக்கில் போட்டியை நடத்தும் பிரிட்டனையும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனி அணி 4-2 என்ற கணக்கில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.

   லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வென்ற நெதர்லாந்து அணி அரையிறுதியில் 9-2 என்ற கணக்கில் பிரிட்டனை வீழ்த்தியது. சமீப காலங்களில் அரையிறுதியில் மிகப்பெரிய கோல் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற பெருமையை நெதர்லாந்து பெற்றுள்ளது.

   1936 ஒலிம்பிக் அரையிறுதியில் இந்தியா 10-0 என்ற கணக்கில் வென்றதே இன்றளவும் சாதனையாக உள்ளது. சர்வதேச போட்டிகளில் பிரிட்டன் அணி 9 கோல் வாங்கியது இதுவே முதல்முறை. ஒலிம்பிக்கில் 7 கோல் வித்தியாசத்தில் பிரிட்டன் தோல்வி காண்பது இது 3-வது முறையாகும்.

   வெண்கலப் பதக்கம்: சனிக்கிழமை நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பிரிட்டன் அணிகள் மோதுகின்றன. இதில் ஆஸ்திரேலியாவுக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளது.

   இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதல்: 11-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

   இந்த ஆட்டம் சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு நடைபெறுகிறது. லீக் சுற்றில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட இந்திய அணி, இந்த ஆட்டத்திலாவது வெற்றிபெறுமா? என்ற ஏக்கம் இந்திய ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai