சுடச்சுட

  
  srikanth

  இந்திய அணி மீண்டும் இருபது ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

   மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அவர் மேலும் கூறியது: இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு யுவராஜ் சிங் மிக முக்கியமான வீரர். அவர் களம் புகுந்துவிட்டால் தனிநபராக நின்று அணிக்கு வெற்றி தேடித்தரக்கூடியவர். 2007-ல் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியை இந்தியா வென்றபோது யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருது வென்றதை யாரும் மறக்க முடியாது.

   50 ஓவர் உலகக் கோப்பையிலும் அவர்தான் தொடர் நாயகன் விருதை வென்றார். வரும் உலகக் கோப்பை போட்டியிலும் அவர் தொடர் நாயகனாக உருவெடுப்பார் என்று நம்புகிறோம். இந்திய அணி மீண்டும் இருபது ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ளது என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai