சுடச்சுட

  

  நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் சச்சின், லட்சுமண்

  Published on : 26th September 2012 11:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sachinlaksh

  மும்பை, ஆக.10: நியூஸிலாந்துக்கு எதிரான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

   இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியத் தொடர்களில் ரன் குவிக்கத் தவறிய மூத்த வீரர் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

   திராவிட் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், லட்சுமணையும் நீக்கும்பட்சத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மேலும் பலவீனமாகிவிடும் என்பதைக் கருத்தில் கொண்டும், இந்திய ஆடுகளங்களில் மிகுந்த அனுபவம் பெற்றவர் என்பதைக் கருத்தில் கொண்டும் லட்சுமணுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

   இருப்பினும் இந்த டெஸ்ட் தொடர் லட்சுமணின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை நிர்ணயிப்பதாக அமையும். இதில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் கிரிக்கெட்டை தொடர முடியும். ரன் குவிக்கத் தவறும்பட்சத்தில் ஓய்வுபெற வேண்டிய நிலைக்கோ அல்லது அணியில் இருந்து நீக்கப்பட வேண்டிய கட்டாயத்துக்கோ லட்சுமண் தள்ளப்படுவார்.

   சமீபத்தில் எம்.பி.யான மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், 2 மாத இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். ராகுல் திராவிட் இடத்துக்கு சேதேஷ்வர் புஜாரா சேர்க்கப்பட்டுள்ளார். கணுக்கால் காயத்திலிருந்து மீண்டுவிட்ட இஷாந்த் சர்மா, இளம் வீரர் பியூஷ் சாவ்லா இடம் பெற்றுள்ளனர். மாற்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரெய்னா இடம்பிடித்துள்ளார்.

   பியூஷ் சாவ்லா உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடாதபோதும் அவர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் லெக் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லா, முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே இடத்துக்கு சரியான நபர் என்ற அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

   இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் வரும் 23-ம் தேதி ஹைதராபாதிலும், இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் வரும் 31-ம் தேதி பெங்களூரிலும் தொடங்குகின்றன.

   அணி விவரம்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஸ்வின், ஜாகீர்கான், பிரக்யான் ஓஜா, உமேஷ் யாதவ், அஜிங்க்யா ரஹானே, பியூஷ் சாவ்லா, இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா.

   

   கடைசி  தேர்வுக்குழு கூட்டம்

   நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ததே, ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவினரின் கடைசிக் கூட்டம். வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டத்தின்போது தேர்வுக்குழு மாற்றியமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai