சுடச்சுட

  
  spt5

  லண்டன், ஆக.10: மகளிர் 800 மீ. ஓட்டத்தின் அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் தின்டு லூக்கா தோல்வி கண்டார்.

   வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இப் போட்டியில் தின்டு லூக்கா 1.59 விநாடிகளில் இலக்கை எட்டி அவர் இடம்பெற்றிருந்த பிரிவில் 6-வது இடத்தையே பிடித்தார். அரையிறுதியைப் பொருத்தவரையில் முதல் 2 இடங்களைப் பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் தின்டு வெளியேற நேர்ந்தது.

   இந்தியாவில் இருந்து பங்கேற்ற தட கள வீரர், வீராங்கனைகளோடு ஒப்பிடும்போது கேரளத்தைச் சேர்ந்தவரான தின்டு லூக்கா சிறப்பாகவே செயல்பட்டார்.

   ஆனால் உலகின் முன்னணி வீரர்களுக்கு முன்பு தின்டு லூக்காவின் வேகம் எடுபடவில்லை. தின்டு லூக்காவோடு தட களத்தில் இந்தியாவின் ஆட்டம் சற்றேறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியாவில் இருந்து பங்கேற்ற 14 பேரில் 13 பேர் தோல்வி கண்டு வெளியேறிவிட்டனர்.

   இந்தியாவின் ராம் சிங் யாதவ் மாரத்தானில் பங்கேற்கவுள்ளார். இந்தப் போட்டி ஒலிம்பிக்கின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai