சுடச்சுட

  
  spt8

  புது தில்லி, ஆக.10: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோமுக்கு ரொக்கப் பரிசு குவிந்து வருகிறது.

   ரூ. 10 லட்சம்: மேரி கோமுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய பழங்குடியினத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

   பழங்குடியினத் துறை அமைச்சகம் சார்பில் மேரி கோமுக்கு வரும் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

   அதில் அவருக்கு ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

   ரூ.50 லட்சம்: மணிப்பூரைச் சேர்ந்தவரான மேரி கோமுக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அம் மாநில அரசு அறிவித்துள்ளது.

   இதேபோல் 2 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் இபோபி சிங் தெரிவித்துள்ளார்.

   இப்போது மணிப்பூர் மாநில காவல் துறையில் பணியாற்றி வரும் அவருக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வும் அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai