சுடச்சுட

  
  spt4

  லண்டன், ஆக.11: ஒலிம்பிக் ஆடவர் 400 மீ. தொடர் ஓட்டத்தில் பஹாமாஸ் அணி தங்கம் வென்றது. இதன்மூலம் 400 மீ. தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பஹாமாஸ்.

   சனிக்கிழமை அதிகாலையில் நடைபெற்ற இப் போட்டியில் பஹாமாஸ் அணி 2 நிமிடம், 56 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றது.

   தொடர்ந்து 8-வது முறையாக தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா, 2 நிமிடம், 57 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தையே வென்றது. டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணி 2 நிமிடம் 59 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றது.

   1984 ஒலிம்பிக்கில் தொடங்கி 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் வரை 400 மீ. தொடர் ஓட்டத்தில் தொடர்ந்து 7 முறை தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்காவுக்கு இந்த ஒலிம்பிக் அதிர்ச்சியாக அமைந்தது.

   இதனால் அமெரிக்காவின் ரேமான் டெய்லர், ஒலிம்பிக்கில் 4-வது தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

   400 மீ. தடையோட்டத்தில் அவர் இரு தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். இதேபோல் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க அணியிலும் டெய்லர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai