சுடச்சுட

    

    லண்டன், ஆக.11: ஒலிம்பிக் ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டியில் இந்தியாவின் பசந்த பஹதூர் ராணா 36-வது இடத்தைப் பிடித்தார்.

     இருப்பினும் அவர் 3 மணி, 56 நிமிடம், 48 விநாடிகளில் இலக்கை எட்டியதன் மூலம் தனது பழைய தேசிய சாதனையை (4 மணி, 2 நிமிடம், 13 விநாடிகள்) முறியடித்தார்.

     சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் மொத்தம் 63 பேர் பங்கேற்றனர். இதில் ரஷியாவின் செர்ஜி கிர்டியாப்கின் 3 மணி, 35 நிமிடம், 59 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கத்தை வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்தார்.

     ஆஸ்திரேலியாவின் ஜேர்டு டாலென்ட் 3 மணி, 36 நிமிடம், 53 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றார். முன்னதாக பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

     சீனாவின் டியான் பெங் 3 மணி, 37 நிமிடம், 16 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

     இந்தப் போட்டியில் 51 பேர் மட்டுமே பந்தய தூரத்தைக் கடந்தனர். மற்றவர்களில் சிலர் இலக்கை எட்டாமல் பாதியிலேயே நின்றுவிட்டனர். ஒரு சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai