சுடச்சுட

  
  spt1

  சென்னை, ஆக.11: ஒலிம்பிக் போட்டியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆடவர் 66 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் களமிறங்குகிறார் இந்தியாவின் சுஷில் குமார்.

   கடந்த ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்று பெருமை சேர்த்த சுஷில் குமார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

   இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டுகளில் மல்யுத்தமும் ஒன்று. ஆனால் சனிக்கிழமை வரை நடைபெற்ற மல்யுத்தப் போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு முக்கிய வீரர்கள் ஜொலிக்காத நிலையில், இந்தியாவின் கடைசி நம்பிக்கையாகவே சுஷில் குமார் பார்க்கப்படுகிறார்.

   பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிறகு, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மற்றும் தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி ஆகியவற்றில் தங்கம் வென்று பெருமை சேர்த்தார் சுஷில் குமார்.

   இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் தனது லட்சியம் என்று சுஷில் குமார் கூறியுள்ளார். அதனால் போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை சுஷில் குமார், பதக்கம் வென்று இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையை உயர்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசியக் கொடியை சுஷில் குமார் ஏந்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai