சுடச்சுட

  
  spt2a

  லண்டன், ஆக.11: ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் அமெரிக்கா-ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் போட்டியின் நிறைவுநாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

   முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா 109-83 என்ற புள்ளிகள் கணக்கில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 67-59 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது. 2008-ல் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் இறுதிச் சுற்றிலும் அமெரிக்கா, ஸ்பெயின் அணிகளே மோதின. ஆனால் இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 118-107 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தங்கத்தைத் தட்டிச் சென்றது.

   இந்த நிலையில் இந்த முறையும் அமெரிக்காவும், ஸ்பெயினும் மோதவுள்ளன. இரு அணிகளுமே வலுவான அணிகளாகவே உள்ளன. இதனால் தங்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள அமெரிக்கா போராடும். அதேநேரத்தில் ஸ்பெயின் அணி, கடந்த ஒலிம்பிக்கில் கண்ட தோல்விக்கு இந்த முறை அமெரிக்காவை பழிதீர்க்கும் முனைப்பில் களமிறங்கும்.

   வெண்கலப் பதக்கம்: வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரஷியாவும், ஆர்ஜென்டீனாவும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai