சுடச்சுட

  

  ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி படுதோல்வி கண்டது தொடர்பாக உள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா பொதுச் செயலர் நரேந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.

   இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: இந்தத் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ஒட்டு மொத்த அணியின் சார்பில் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தோல்வி தொடர்பாக 10 நாள்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு பயிற்சியாளர் மைக்கேல் நாப்ஸ், அணி மேலாளர், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

   அறிக்கை வந்த பிறகு அதுதொடர்பாக விவாதித்து பின்னர் அணியை பலப்படுத்துவது தொடர்பாக அடுத்த 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுப்பதற்கு முன்பாக முன்னாள் வீரர்களிடம் கருத்து கேட்கப்படும். பின்னர் அணியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

   மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த பத்ரா, "இந்த தோல்வி விவகாரத்தில் எந்த ஒரு தனி நபர் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. ஹாக்கி என்பது அணி விளையாட்டு. நாம் ஒன்றுபட்ட அணியாக இருந்து சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai