சுடச்சுட

    
    spt9

    லண்டன், ஆக.12: ஒலிம்பிக் ஆடவர் 60 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலம் வென்றார்.

     இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.

     சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியின் தகுதிச்சுற்றில் யோகேஷ்வர் 3-1 என்ற கணக்கில் பல்கேரியாவின் குய்டியோ அனாடாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

     பின்னர் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் யோகேஷ்வர் 1-3 என்ற கணக்கில் ரஷியாவின் குடுகோவ் பெஸிக்கிடம் தோல்வி கண்டார்.

     பிரதான சுற்றில் தோற்றாலும், "ரெபிசேஜ்' சுற்றில் (வெண்கலப் பதக்கத்துக்காக போட்டியிடும் சுற்று) விளையாடும் வாய்ப்பைப் பெற்றார் யோகேஷ்வர் தத்.

     அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட யோகேஷ்வர், தனது முதல் சுற்றில் 3-0 என்ற கணக்கில் போர்ட்டோ ரிகோவின் பிராங்க்ளின் கோமேûஸயும், 2-வது சுற்றில் 3-1 என்ற கணக்கில் ஈரானின் மசூத் இஸ்மெயிலையும் வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். 20 நிமிட இடைவெளிகளில் இந்த இரு சுற்றுகளிலும் அவர் வெற்றி கண்டார்.

     பின்னர் நடைபெற்ற 3-வது சுற்றில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய யோகேஷ்வர் 3-1 என்ற வட கொரியாவின் ஜாங் மியாங்கை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

     இந்த ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 5-வது பதக்கம் இது. இதுவரை இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

     ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்தியா வென்றுள்ள 3-வது பதக்கம் இது. 1952-ல் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் கஷபா தாதாசாஹேப் ஜாதவ் வெண்கலம் வென்றார்.

     2008-ல் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவின் சுஷில் குமார் வெண்கலம் வென்றார். அதன்பிறகு இப்போது யோகேஷ்வர் வெண்கலம் வென்றுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai