சுடச்சுட

    
    spt2

    லண்டன், ஆக.11: ஒலிம்பிக் ஆடவர் 60 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் தோல்வி கண்டார். சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் யோகேஷ்வர் தத் 1-3 என்ற கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் பெஸிக் குடுகோவிடம் தோல்வி கண்டார். இந்தச் சுற்றிலும் தோற்றாலும், "ரெபிசேஜ்' சுற்றின் மூலம் அவர் வெண்கலப் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

     அமித் குமார் வெளியேற்றம்: மற்றோர் இந்திய வீரரான அமித் குமார் 55 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியின் "ரெபிசேஜ்' சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற 55 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற அமித் குமார், தனது காலிறுதி ஆட்டத்தில் 1-3 என்ற கணக்கில் ஜார்ஜியாவின் விளாதிமிரிடம் தோல்வி கண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai