சுடச்சுட

  

  லண்டன், ஆக.11: லண்டனில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற 30-வது ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.

   லண்டனில் உள்ள ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சி 3 மணி நேரம் நடைபெறும் என்று தெரிகிறது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞர்களின் அதிரடி இசையுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், 4,100 நடனக் கலைஞர்கள், 350 பள்ளிக் குழந்தைகள் பங்கு பெறுகின்றனர். தொடக்க நிகழ்ச்சியைப் போலவே, நிறைவு விழாவும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை உள்ளிட்டவற்றுடன் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

   நிறைவு விழா நிகழ்ச்சியின்போது அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தவுள்ள பிரேசிலிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்படும். அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை இரவு நிலவரப்படி பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2-வது இடத்திலும், போட்டியை நடத்தும் நாடான பிரிட்டன் 3-வது இடத்திலும் இருந்தன. போட்டியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை வாலிபால், ஹேண்ட்பால், ஜிம்னாஸ்டிக், நவீன பென்டத்லான், தட களம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, சைக்கிள், மல்யுத்தம் உள்பட 15 இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.

   பென் எய்ன்ஸ்லீக்கு கெüரவம்: ஒலிம்பிக் படகு போட்டியில் தொடர்ந்து 4-வது முறையாக தங்கம் வென்றவரான பிரிட்டனின் பென் எய்ன்ஸ்லீ நிறைவு விழாவில் பிரிட்டன் கொடியை ஏந்திச் செல்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai