சுடச்சுட

  
  spt1a

  லண்டன், ஆக.11: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 6 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு கடைசி இடத்தைப் பிடித்தது.

   சனிக்கிழமை நடைபெற்ற 11-வது இடத்துக்கான போட்டியில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. இதன்மூலம் 12 அணிகள் பங்கேற்ற இப் போட்டியில் இந்தியாவுக்கு கடைசி இடமே கிடைத்தது.

   ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் 8 முறை தங்கம் வென்ற ஒரே அணியான இந்திய அணி, இப்போது மோசமான வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் இந்திய அணி 8-வது இடத்தைப் பிடித்ததே மோசமான பதிவாக இருந்தது.

   லீக் சுற்றில் "பி' பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி, தனது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், கொரியா, நியூஸிலாந்து ஆகிய 5 அணிகளிடமும் படுதோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai