சுடச்சுட

    
    spt7

    லண்டன், ஆக.11: ஒலிம்பிக் மகளிர் 100 மீ. தொடர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனைகள் தங்கம் வென்றதோடு புதிய உலக சாதனையும் படைத்தனர்.

     சனிக்கிழமை அதிகாலையில் நடைபெற்ற இப் போட்டியில் அமெரிக்காவின் கார்மெலிட்டா ஜெட்டர், அலிசன் பெலிக்ஸ், டியன்னா மேடிசன், பியன்கா நைட் ஆகியோர் அடங்கிய அணி 40.82 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றது.

     40.82 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்ததன் மூலம் 27 ஆண்டுகால உலக சாதனையையும் அமெரிக்க வீராங்கனைகள் முறியடித்தனர்.

     1985-ம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் கிழக்கு ஜெர்மனி அணி 41.37 விநாடிகளில் இலக்கை எட்டியதே இதற்கு முன் உலக சாதனையாக இருந்தது.

     இப்போது அதை அமெரிக்க வீராங்கனைகள் தகர்த்துள்ளனர். இது மட்டுமின்றி ஒலிம்பிக் சாதனையும் அமெரிக்க அணியின் வசமாகியுள்ளது. இதே பிரிவில் ஜமைக்கா அணி 41.41 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கமும், உக்ரைன் அணி 42.04 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றன.

     100 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றதன் மூலம் இந்த ஒலிம்பிக்கில் 2-வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார் அமெரிக்காவின் அலிசன் பெலிக்ஸ். முன்னதாக 200 மீ. ஓட்டத்தில் அவர் தங்கம் வென்றார்.

     இதேபோல் கார்மெலிட்டா ஜெட்டர் இந்த ஒலிம்பிக்கில் வெல்லும் 3-வது பதக்கம் இது. முன்னதாக 100 மீ. ஓட்டத்தில் வெள்ளியும், 200 மீ. ஓட்டத்தில் வெண்கலமும் வென்றார். 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் மகளிர் 100 மீ. தொடர் ஓட்டத்தில் கடைசியாக தங்கப் பதக்கம் வென்றது அமெரிக்கா.

     அதன்பிறகு 2000-ல் வெண்கலப் பதக்கம் வென்றது. பின்னர் நடைபெற்ற ஏதென்ஸ், பெய்ஜிங் ஆகிய இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் கிடைக்கவில்லை. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தங்கம் வென்றுள்ளது அமெரிக்கா.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai