Enable Javscript for better performance
கால்பந்து: மெக்ஸிகோவுக்கு தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    கால்பந்து: மெக்ஸிகோவுக்கு தங்கம்

    Published on : 26th September 2012 11:17 AM  |   அ+அ அ-   |    |  

    spt1

    லண்டன், ஆக.12: ஒலிம்பிக் ஆடவர் கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தங்கம் வென்றது. ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ அணி வென்ற முதல் பதக்கம் இது.

     சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் மெக்ஸிகோ 2-1 என்ற கணக்கில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியை வீழ்த்தியது.

     மெக்ஸிகோவின் ஒரைப் பெரல்டாஸ் 2 கோல் அடித்து அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தார். முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மெக்ஸிகோ, தங்கத்தோடு தாயகம் திரும்பியது.

     அதேநேரத்தில் கால்பந்து போட்டியில் முன்னணி அணியான பிரேசில், ஒலிம்பிக்கில் இதுவரை தங்கம் வென்றதில்லை என்ற குறை தொடர்கிறது.

     1984, 1988 ஒலிம்பிக் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய பிரேசில், அப்போதும் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பிரேசில் அணி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

     தென் கொரியாவுக்கு வெண்கலப் பதக்கம்: 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தென் கொரியா 2-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலத்தைத் தட்டிச் சென்றது.

     

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp