சுடச்சுட

  

  புது தில்லி, ஆக. 12: லண்டன் ஒலிம்பிக் தட கள போட்டிகளில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கன் கூறியுள்ளார்.

   2020-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் இந்தியா 25 பதக்கங்கள் வரை வெல்லும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மாக்கன் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் அதைவிட கூடுதலாக பதக்கங்கள் கிடைத்துள்ளன. இது முன்னேற்றத்தையே காட்டுகிறது.

   இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை ஒப்பிடும்போது இதுதான் இந்தியாவுக்கு சிறந்த ஒலிம்பிக். முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிக பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர். நமது நாட்டில் மனித வளமேம்பாட்டு குறியீடு, தனி நபர் வருமானம் ஆகியவை மிகக் குறைவாகவே உள்ளன. எனவே ஒலிம்பிக்கில் நாம் இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது என்றார் மாக்கன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai