சுடச்சுட

  

  லண்டன், ஆக. 12: பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியைப் புறக்கணித்த தென் கொரிய கால்பந்து வீரர் பார்க் ஜோங்வூ மீது நடவடிக்கை எடுக்க சர்வதேச ஒலிம்பிக் சங்கமும், சர்வதேச கால்பந்து சம்மேளனமும் முடிவு செய்துள்ளது.

   ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தென் கொரியா - ஜப்பான் அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா வென்றது.

   ஆட்டம் முடிந்த உடன் தென்கொரிய வீரர் பார்க் ஜோங்வூ, ஓர் வாசக அட்டையுடன் மைதானத்தில் வலம் வந்தார். தென்கொரியா - ஜப்பான் கடல் பகுதியில் உள்ள சில தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்னை உள்ளது. அதில் தென் கொரியாவுக்கு ஆதரவான வாசகங்களை எழுதிய அட்டையை பார்க் மைதானத்தில் காண்பித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

   தொடர்ந்து நடைபெற்ற பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai