சுடச்சுட

  
  spta

  லண்டன், ஆக. 12: லண்டன் ஒலிம்பிக் ஆடவர் மாரத்தான் ஓட்டத்தில் இந்தியாவின் ராம் சிங் யாதவ் (படம்) 78-வது இடத்தைப் பிடித்தார். இதில் மொத்தம் 105 வீரர்கள் பங்கேற்றனர்.

   லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் 42.1 கி.மீ. என்ற இலக்கை 1 மணி நேரம் 8 நிமிடம் 1 விநாடியில் கடந்த உகாண்டாவின் ஸ்டீபன் கிப்ரோடிச் தங்கம் வென்றார். உகாண்டாவுக்கு கிடைத்த முதல் பதக்கமும் இதுதான்.

   கென்ய வீரர்கள் கெபெல் கிரூய், வில்சன் கிப்சாங் கிப்ரோடிச் ஆகியோர் முறையே 2}வது, 3}வது இடத்தைப் பிடித்து வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர். கெபெல் 2 மணி நேரம் 8 நிமிடம், 27 விநாடிகளில் இலக்கை எட்டினார். வில்சன் 2 மணி நேரம் 9 நிமிடம் 37 விநாடிகள் எடுத்துக் கொண்டார். 31 வயதாகும் ராம் சிங் யாதவ் 2 மணி நேரம் 30 நிமிடம் 19 விநாடிகளில் இலக்கை எட்டினார். இதற்கு முன்னர் அவர், 2 மணி நேரம் 16 நிமிடம் 59 விநாடிகளில் இதே தூரத்தை ஓடிக் கடந்துள்ளார். இதுவே அவரது தனிப்பட்ட சாதனையாக இருந்தது. ஆனால் ஒலிம்பிக்கில் ராம் சிங்கின் வேகம் குறைந்துவிட்டதால் 78-வது இடத்துக்குப் பின்தங்கிவிட்டார்.

   ஒலிம்பிக் மாரத்தானில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே வீரர் ராம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் பங்கேற்ற 105 பேரில் 20 பேர் இலக்கை எட்டும் முன்னதாகவே வெளியேறிவிட்டனர். 85 பேர் மட்டுமே இலக்கை எட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai