சுடச்சுட

    
    sptb

    லண்டன், ஆக.12: ஒலிம்பிக் 100 மீ. தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா அணி தங்கம் வென்றதோடு, உலக சாதனையும் படைத்தது.

     ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடைபெற்ற இப்போட்டியில் நெஸ்டா கார்ட்டெர், மைக்கேல் பிரேட்டர், யோகன் பிளேக், உசேன் போல்ட் ஆகியோர் அடங்கிய ஜமைக்கா அணி 36.84 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றது.

     இதன்மூலம் தங்களின் முந்தைய உலக சாதனையை (37.04 விநாடி) முறியடித்து புதிய உலக சாதனை படைத்தது ஜமைக்கா அணி. இந்தப் பிரிவில் அமெரிக்க அணி 37.04 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தையும், டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணி 38.12 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

     போல்ட் சாதனை: இந்தப் போட்டியிலும் தங்கம் வென்றதன் மூலம் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 100 மீ. தொடர் ஓட்டம் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்ட ஒரே வீரர் என்ற சாதனையை உசேன் போல்ட் படைத்துள்ளார். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகியவற்றின் உலக சாதனையும் உலகின் அதிவேக மனிதரான போல்ட் வசமே உள்ளது.

     2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தொடங்கி இதுவரை தான் பங்கேற்ற 8 தனிநபர் ஓட்டங்களில் 7-ல் தங்கம் வென்றுள்ளார் போல்ட். தென் கொரியாவின் தேகுவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனாலேயே அதில் மட்டும் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai