சுடச்சுட

    
    spt2

     லண்டன், ஆக.12: ஒலிம்பிக் ஆடவர் 5000 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார் பிரிட்டன் வீரர் முகமது ஃபாரக்.

     இதன்மூலம் ஒரே ஒலிம்பிக்கில் 5000 மீ. ஓட்டம், 10 ஆயிரம் மீ. ஓட்டம் இரண்டிலும் வெற்றி கண்ட 7-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக 10 ஆயிரம் மீ. ஓட்டத்தில் அவர் தங்கம் வென்றிருந்தார்.

     சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் 5000 மீ. ஓட்டத்தில் 13 நிமிடம், 41.66 விநாடிகளில் இலக்கை எட்டி அவர் தங்கம் வென்றார். எத்தியோப்பியாவின் தேஜன் கெப்ரீமெஸ்கெல் 13 நிமிடம், 41.98 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கமும், கென்யாவின் தாமஸ் லங்கோஸிவா 13 நிமிடம், 42.36 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai