சுடச்சுட

  
  spt5

  லண்டன், ஆக.12: ஒலிம்பிக் ஆடவர் 66 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

   இதன் மூலம் தொடர்ந்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக 2008-ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

   லண்டன் ஒலிம்பிக் போட்டியின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 66 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜப்பானின் தத்ஷூரே யோனிமெட்ஸýவை எதிர்கொண்டார் சுஷில் குமார். இந்தப் போட்டியில் கடுமையாகப் போராடிய சுஷில் 1-3 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவரால் வெள்ளிப் பதக்கமே வெல்ல முடிந்தது. ஜப்பான் வீரர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

   முன்னதாக நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 3-1 என்ற கணக்கில் துருக்கியின் ஷகிம் ரமாஜென்னையும், காலிறுதியில் 3-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் நைவ்ரூ ஜோவ் இக்தியாரையும் சுஷில் குமார் வென்றார்.

   அரையிறுதியில் சுஷில் குமார் 3-1 என்ற கணக்கில் கஜகஸ்தான் வீரர் டனடாரோவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச் சுற்றில் சுஷில் குமார் தோல்வி கண்டதால் தங்கப் பதக்கம் கை நழுவியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai