சுடச்சுட

  

  லண்டன், ஆக.12: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் ஜெர்மனி தொடர்ந்து 2-வது முறையாக தங்கம் வென்றுள்ளது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஜெர்மனி 2-1 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

   தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் தடுப்பாட்டக்காரர்களும் சிறப்பாகச் செயல்பட்டதால் பந்து நடுகளத்திலேயே இருந்தது.

   முதல் பாதி ஆட்டநேரம் முடிவடைய 2 நிமிடங்களே இருந்த நிலையில் (33-வது நிமிடம்) ஜெர்மனியின் ஜான் பிலிப் ராபென்டி கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் 54-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வான் டெர் வீர்டன் கோலடித்தார். இதன்பிறகு அடுத்த 10 நிமிடங்கள் ஆட்டம் பரபரப்பாக சென்றது. 66-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஜான் பிலிப் ராபென்டி 2-வது கோலடிக்க அதுவே ஜெர்மனியின் வெற்றிக் கோலானது.

   ஜெர்மனிக்கு 4-வது தங்கம்: ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் ஜெர்மனி வென்ற 4-வது தங்கப் பதக்கம் இது. இந்திய அணி அதிகபட்சமாக 8 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிக தங்கப் பதக்கங்களை வென்றது ஜெர்மனிதான்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai