சுடச்சுட

    
    spt6

    துபை, ஆக. 13: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விருதுக்கு இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

     ரசிகர்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு சச்சினும், 2012-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு கோலியும் பரித்துரைக்கப்பட்டுள்ளனர்.

     சச்சின் தவிர இலங்கையின் சங்ககாரா, தென்னாப்பிரிக்காவின் பிலாண்டர், காலிஸ், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் பெயரும் விருதுக்கான பரிந்துரையில் உள்ளது.

     இந்த விருதை சச்சின் ஏற்கெனவே 2010-ம் ஆண்டிலும், சங்ககாரா 2011-ம் ஆண்டிலும் பெற்றுள்ளனர். இந்திய அணி கேப்டன் தோனி, தொடக்க வீரர் கெüதம் கம்பீர் ஆகியோர் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

     அதே நேரத்தில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய வீரர்கள் எவரது பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. இதற்கான போட்டியில் தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், சங்ககாரா, இங்கிலாந்தின் அலைஸ்டைர் குக், பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் ஆகியோர் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai