Enable Javscript for better performance
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு

    Published on : 26th September 2012 11:18 AM  |   அ+அ அ-   |    |  

    spt3

    புது தில்லி, ஆக. 13: லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

     காலையில் மக்களவை தொடங்கியதும் மக்களவைத் தலைவர் மீரா குமார் பாராட்டுக் குறிப்பை வாசித்தார். "ஆடவருக்கான 66 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஷீல் குமார், ஆடவருக்கான 60 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், மகளிருக்கான 51 கிலோ குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம் ஆகியோர் சாதனை புரிந்துள்ளனர். அவர்களது லட்சியக் கனவுகள் நிறைவேற நாடாளுமன்றம் சார்பில் வாழ்த்துகிறோம்' என்று மீரா குமார் கூறினார்.

     மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி, "இந்திய வீரர்களின் ஒலிம்பிக் போட்டி சாதனைகள், இளைய சமூகத்தினருக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். அவர்களால் நாடு பெருமையடைகிறது' என்றார்.

     லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலுக்கான இரு வேறு போட்டிகளில் இந்திய ராணுவ வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கமும் ககன் நரங் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர். பாட்மிண்டனில் சாய்னா நெவால் வெண்கலப் பதக்கம் பெற்றார். அந்த மூவருக்கும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    kattana sevai