சுடச்சுட

    

    20 ஓவர் உலகக் கோப்பை: கோலிக்கு எதிராக வியூகம் அமைக்க தில்ஷான் யோசனை

    Published on : 26th September 2012 11:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt4

    புது தில்லி, ஆக. 13: இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது விராட் கோலிக்கு எதிராக சிறப்பு வியூகம் வகுக்க வேண்டுமென இலங்கை தொடக்க வீரர் தில்ஷான் கூறியுள்ளார்.

     இந்திய அணி சமீபத்திய இலங்கை சுற்றுப் பயணத்தின் போது கோலி சிறப்பாக விளையாடி வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

     இலங்கை பந்து வீச்சாளர்களால் அவரது ரன் குவிப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எளிதில் ஆட்டமிழக்கச் செய்யவும் முடியவில்லை.

     இந்நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இலங்கையில் செப்டம்பர் 18-ல் தொடங்குகிறது. இப்போட்டி தொடர்பாக இலங்கை தொடக்க வீரர் தில்ஷான் கூறியிருப்பது:

     20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் இந்தியாவை இலங்கை எதிர்கொள்ளவில்லை.

     எனினும் சூப்பர் 8 மற்றும் அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்திய அணியில் இளம் வீரர் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபகாலமாக மட்டுமல்லாது, 2011 உலகக் கோப்பையில் இருந்தே அவர் எதிரணிக்கு பெரும் சவாலாக விளங்குகிறார்.

     அவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினமானது. எனவே அவருக்கு எதிராக விளையாட சிறப்பு வியூகம் அமைப்பது அவசியம் என்றார் தில்ஷான்.

     90 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 3,886 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 51.81. இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள கோலி 491 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 32.73.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai