சுடச்சுட

  

  யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா

  Published on : 26th September 2012 11:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  14spt5

  டெளன்ஸ்வில்லே, ஆக.14: 19 வயதுக்குட்பட்டோர் (யு-19) கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

  இந்திய வீரர் கமல் பாஸி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

  முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே 44.1 ஓவர்களில் 198 ரன்களுக்கு சுருண்டது.

  ஆஸ்திரேலியாவின் டெüன்ஸ்வில்லே நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

  இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் பிரசாந்த் சோப்ரா-கேப்டன் உனட்கட் சந்த் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 26.3 ஓவர்களில் 139 ரன்கள் சேர்த்தது. 82 பந்துகளைச் சந்தித்த சோப்ரா 7 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார்.

  உனட் கட் 85 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அபராஜித் 24, ஹணுமா பிகாரி 31 ரன்கள் எடுத்தனர். கடைசிக் கட்டத்தில் கமல் பாஸி 5 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் சேர்க்க இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது.

  ஜிம்பாப்வே தரப்பில் கேம்ப்பெல் லைட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

  கமல் பாஸி அபாரம்: 262 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய வீரர் கமல் பாஸியின் வேகத்தில் அந்த அணி சரிவுக்குள்ளானது. முன்னணி வீரர்கள் கசுஜா 4, மஸôசயர் 6, பென்ட்லீ 8, ரியான் பர்ல் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க 4 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது ஜிம்பாப்வே.

  இதையடுத்து மால்கம் லேக்குடன் ஜோடி சேர்ந்தார் ஜாங்வீ. இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. ஜிம்பாப்வே 117 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. ஜாங்வீ 29 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதன்பிறகு அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாதது.

  இருப்பினும் தனிநபராகப் போராடிய மால்கம் லேக் சதமடித்தார்.

  கடைசி விக்கெட்டாக மால்கம் லேக் வெளியேற ஜிம்பாப்வேயின் ஆட்டம் 198 ரன்களில் முடிவுக்கு வந்தது. 107 பந்துகளைச் சந்தித்த மால்கம் 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் கமல் பாஸி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  "சி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி கண்ட இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியுள்ளது.

  இந்தியா தனது 3-வது லீக் ஆட்டத்தில் பபுவா நியூகினியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் வியாழக்கிழமை டௌன்சில்லேவில் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai