சுடச்சுட

  
  14spt7

  புது தில்லி, ஆக.14: மத்திய அமைச்சரும், மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான விலாஸ்ராவ் தேஷ்முக் (படம்) மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இரங்கல் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விலாஸ்ராவ் தேஷ் முக் மிகச்சிறந்த நிர்வாகி. கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மும்பையில் நடைபெறும் எல்லா போட்டிகளையும் நேரில் வந்து ரசித்தவர். பல ஆண்டுகளாக மும்பை கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகியாக இருந்துள்ளார்.

  கடந்த ஆண்டு மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் முதல் பிசிசிஐ ஊடக கமிட்டி தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அவரின் மறைவு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  மும்பை கிரிக்கெட் சங்கம் இரங்கல்: விலாஸ்ராவ் தேஷ்முக் மறைவுக்கு மும்பை கிரிக்கெட் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச் சங்கத்தின் துணைத் தலைவர் ரத்னாகர் ஷெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  எங்கள் சங்கத்தின் தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் மரணமடைந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகியாக இல்லாத காலங்களில்கூட சங்கத்துக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார்.

  மும்பை கிரிக்கெட் சங்கம், கிரிக்கெட் கிளப்புகள் உள்ளிட்டவற்றின் சார்பில் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

  கல்லீரல் புற்றுநோய் காரணமாக சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவ் தேஷ்முக், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மரணம் அடைந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai