சுடச்சுட

  

  பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தோற்றதால் 4 ஆண்டுகள் தூக்கத்தை இழந்தேன்

  Published on : 26th September 2012 11:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  15spt2

  சோன்பட், ஆக.15: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் காலிறுதியில் தோற்றதால் கடந்த 4 ஆண்டுகளாக இரவில் சரியாக தூங்கவில்லை. இப்போது பதக்கம் வென்றுவிட்டதால் நன்றாக தூங்குவேன் என்றார் யோகேஷ்வர் தத்.

  லண்டன் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத் மேலும் கூறியது:

  கடந்த 4 ஆண்டுகளாக இரவில் தூங்கும்போது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றது போன்ற கனவு வரும். அதனால் திடீரென விழித்துக் கொள்வேன். இந்த முறை கடவுள் எனக்கு பதக்கம் கிடைக்க உதவியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இனிமேல் நன்றாக தூங்குவேன் என்றார்.

  லண்டன் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் பெஸிக் குடுகோவிடம் தோற்றது குறித்துப் பேசுகையில், "பெஸிக்கிடம் தோற்றது என்னை மிகவும் பாதித்தது. கடுமையான பயிற்சிக்குப் பிறகு இந்த ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றதால் பதக்கம் வெல்லாமல் திரும்பக்கூடாது என்று நினைத்தேன். பெஸிக், இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதை அறிந்ததும், தோல்வியை நினைத்து நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு "ரெபிசேஜ்' சுற்றில் விளையாட ஆரம்பித்தேன்' என்றார்.

  அவர் பேசி முடிப்பதற்குள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai