சுடச்சுட

    
    15spt7

    லண்டன், ஆக. 15: இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், பயிற்சியாளர் ஆன்டி பிளவர் குறித்து தரக்குறைவான எஸ்.எம்.எஸ். அனுப்பியதற்காக கெவின் பீட்டர்சன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். பீட்டர்சன் முன்னதாகவே மன்னிப்புக் கோரியிருந்தால், அவர் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுதொடர்பாக பீட்டர்சன் கூறியிருப்பது: கிண்டல் செய்யும் வகையில்தான் தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள எனது நெருங்கிய நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். மற்றபடி தரக்குறைவான வகையிலோ, கோபத்தை ஏற்படுத்தும் வகையிலோ எஸ்.எம்.எஸ். அனுப்பவில்லை. இருப்பினும் அந்த செயலுக்காக ஸ்டிராஸிடமும், அணியினரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    முன்னதாக 2-வது டெஸ்ட் போட்டியின்போது தென்னாப்பிரிக்க வீரர்கள் சிலருக்கு பீட்டர்சன் எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அதில் இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், பயிற்சியாளர் ஆன்டி பிளவர் ஆகியோர் குறித்து தரக்குறைவாக கூறியிருந்ததாகக் கூறப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai