சுடச்சுட

  

  மேரி கோம் பரிசுத் தொகை: ரூ. 75 லட்சமாக உயர்த்தியது மணிப்பூர் அரசு

  Published on : 26th September 2012 11:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  15spt5

  இம்பால், ஆக.15: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற மேரி கோமுக்கு ரூ. 75 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குகிறது மணிப்பூர் அரசு.

  இதுதவிர மணிப்பூர் காவல் துறையில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் மேரி கோம். முன்னதாக மணிப்பூர் வீராங்கனையான மேரி கோமுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு முதல்வர் இபோபி சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது பரிசுத்தொகையை ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

  இதேபோல் மணிப்பூரில் இருந்து லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற குத்துச்சண்டை வீரர் தேவேந்திரோ சிங், வில்வித்தை வீராங்கனை எல்.பி.தேவி, பளுதூக்குதல் வீராங்கனை சோனியா சானு ஆகியோருக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கவும், அரசு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வரின் செயலர் சுமந்த் சிங் தெரிவித்தார்.

  குத்துச்சண்டை அகாதெமி அமைக்க மேரி கோமுக்கு 2 ஏக்கர் நிலமும் வழங்கியுள்ளது மணிப்பூர் அரசு. இதுதவிர அசாம் அரசின் சார்பில் ரூ. 20 லட்சமும், அருணாசலப் பிரதேச அரசின் சார்பில் ரூ. 10 லட்சமும், வடகிழக்கு கவுன்சில் சார்பில் ரூ.40 லட்சமும், மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் ரூ.10 லட்சமும் மேரி கோமுக்கு வழங்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai