சுடச்சுட

  
  spt9

  நியூயார்க், ஆக.16: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் விலகியுள்ளார்.

  முழங்காலில் ஏற்பட்ட காயம் முழுமையாகக் குணமடையாததால் போட்டியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது:

  அமெரிக்க ஓபன் போட்டியில் விளையாட நான் இன்னும் தயாராகவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கும், குறிப்பாக நியூயார்க் மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  26 வயதாகும் ரஃபேல் நடாலுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவரின் டென்னிஸ் வாழ்க்கை குறித்து பல்வேறு தரப்பினரிடையே கேள்வியெழுந்துள்ளது. கடந்த காலங்களில் நடாலுக்கு இதுபோன்ற காயங்கள் ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு வந்து வாகை சூடியுள்ளார்.

  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட நடால், முழங்கால் காயம் காரணமாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகினார். ஒருவேளை அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தால் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்திருக்கலாம். ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஸ்பெயின் தேசியக் கொடியையும் ஏந்திச் சென்றிருப்பார். இந்த நிலையில் இப்போது அமெரிக்க ஓபனில் இருந்து விலகியுள்ளார்.

  நடால் இதுவரை 11 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் 7 பட்டங்கள் பிரெஞ்சு ஓபனில் வென்றதாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai