சுடச்சுட

  
  spt6

  கான்பெர்ரா, ஆக.16: ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல்.

  வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள தீபிகா 3-11, 11-9, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் கேமிலே செர்மியை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-11 என்ற கணக்கில் இழந்த தீபிகா, அடுத்த 3 செட்களிலும் அபாரமாக ஆடி வெற்றி கண்டார். தீபிகா தனது காலிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் அமந்தா சோபியை சந்திக்கவுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai