சுடச்சுட

  

  புது தில்லி, ஆக.16: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் பரிசுத் தொகையை ரூ. 2 கோடியாக உயர்த்தியுள்ளது தில்லி அரசு.

  முன்னதாக அவருக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவருக்கு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகையை இரு மடங்காக உயர்த்துவது என முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

  அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு இது தொடர்பாக ஷீலா தீட்சித் கூறுகையில், " சுஷில் குமார் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அதனால் அவரின் பரிசுத் தொகையை ரூ.2 கோடியாக உயர்த்தி வழங்குவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது' என்றார்.

  சுஷில் குமார் தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். முன்னதாக 2008-ல் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai