சுடச்சுட

  
  spt8

  லார்ட்ஸ், ஆக.16: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 62.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது.

  இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.

  இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஸ்டீவன் ஃபின்னும் அபாரமாக பந்துவீசியதால் தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. கேப்டன் கிரீம் ஸ்மித் 14, பீட்டர்சன் 22, ஆம்லா 13, காலிஸ் 3 என அடுத்தடுத்து வெளியேற தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

  பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 27, ருடால்ஃப் 42 ரன்கள் எடுத்தனர். அந்த அணி 62.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது. டுமினி 38, பிலாண்டர் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

  இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன் ஃபின் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai