சுடச்சுட

  

  தொடர்ச்சியாக விளையாட முழு உடற்தகுதியுடன் இருக்கிறோம்: மகேந்திர சிங் தோனி

  Published on : 26th September 2012 11:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt5

  மும்பை, ஆக.16: தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முழு தகுதியோடு இருக்கிறோம் என்றார் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி.

  இன்னும் சில நாள்களில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது இந்திய அணி. அதன்பிறகு இருபது ஓவர் உலகக் கோப்பை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது இந்திய அணி.

  இந்த நிலையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபற்ற நிகழ்ச்சியில் இருபது ஓவர் போட்டிக்கான புதிய ஜெர்சியை (உடை) அறிமுகப்படுத்திய தோனி, மேலும் கூறியது:

  ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ஒன்றரை மாத இடைவெளி இருந்ததால் முழு உடற்தகுதியோடு இருக்கிறோம். சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான தொடரில்கூட ஒவ்வொரு போட்டிக்கும் இடையே போதுமான இடைவெளி இருந்தது. அதனால் அடுத்து வரவுள்ள கிரிக்கெட் தொடர்களில் விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம். யுவராஜின் வருகை அணிக்கும், வீரர்களின் ஓய்வறைக்கும் புதிய உற்சாகம் கொடுப்பதாக அமையும். அவர் இல்லாதபோது அந்த வேலையை விராட் கோலி செய்தார் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai