சுடச்சுட

    

    நாடு முழுவதும் ஒலிம்பிக் பதக்கத்தை எடுத்துச் செல்ல ககன் நரங் விருப்பம்

    Published on : 26th September 2012 11:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி, ஆக.16: நாட்டில் உள்ள இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதற்காக தான் வென்ற பதக்கத்தை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல விரும்புவதாக ககன் நரங் தெரிவித்துள்ளார்.

    ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற ககன் நரங்குக்கு மானவ் ரஞ்ச்னா சர்வதேச பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இங்குதான் அவர் முதுநிலைக் கல்வி கற்றார். அதில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:

    நாடு முழுவதும் இந்த பதக்கத்தை எடுத்துச் செல்வதன் மூலம் நாட்டில் உள்ள இளம் தலைமுறையினருக்கு நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பிறகு ஒலிம்பிக் கிராமத்திற்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன்.

    அந்த நேரத்தில் ஒலிம்பிக்கின் முகப்பு வாசகமான "ஒரு தலைமுறைக்கு உத்வேகம் கொடு' என்ற வார்த்தையைப் பார்த்தேன். அப்போதுதான் நம் நாட்டில் உள்ள இளம் தலைமுறையினரிடையே உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது என்றார்.

    தனது பழைய காலங்களை நினைவுகூர்ந்த அவர், "நிலத்தை விற்று எனக்கு ரைபிள் துப்பாக்கி வாங்கித் தந்தார்கள் எனது பெற்றோர்கள். அதன்பிறகு கடந்த 15 ஆண்டுகளாக வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம்' என்றார்.

    பாராட்டு விழாவின்போது ககன் நரங்குக்கு மானவ் ரஞ்ச்னா கீர்த்தி விருதும், ரூ.11 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai