சுடச்சுட

  
  spt3

  டெளன்ஸ்வில்லே, ஆக.16: 19 வயதுக்குட்பட்டோர் (யு}19) உலகக் கோப்பை போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் பபுவா நியூகினியாவை வென்றது. இதன்மூலம் காலிறுதிச் சுற்றில் நுழைந்தது இந்திய அணி.

  முதலில் பேட் செய்த இந்திய அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் பேட் செய்த பபுவா நியூகினியா 31.5 ஓவர்களில் 97 ரன்களுக்கு சுருண்டது.

  ஆஸ்திரேலியாவின் டெüன்ஸ்வில்லே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. கேப்டன் உனட்கட் சந்த் 4, அபாரஜித் 14, பிகாரி 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரசாந்த் சோப்ரா 58 ரன்கள் எடுத்தார். 79 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். பின்னர் வந்த ஆகாஷ்தீப் நாத் 1 ரன்னில் வெளியேறினார். அப்போது இந்தியா 24 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது.

  இதன்பிறகு ஜோடி சேர்ந்த விஜய் úஸால்-ஸ்மித் படேல் ஆகியோர் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். 39 பந்துகளைச் சந்தித்த படேல் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு சரிவு தவிர்க்க முடியாததானது. கடைசி விக்கெட்டாக விஜய் úஸால் 72 ரன்களில் (8 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் இன்னிங்ஸ் 45.1 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  பபுவா நியூகினியா தரப்பில் சோபர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

  ரவிகாந்த் சிங் அபாரம்: பின்னர் ஆடிய பபுவா நியூகினியா அணியில் சியாகா 1 ரன்னில் வீழ்ந்தார். 29 பந்துகளைச் சந்தித்த கென்ட் 27, டோகோடோ பாவ் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு வந்தவர்களில் சார்லஸ் அமினி மட்டுமே 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 97 ரன்களுக்கு சுருண்டது.

  இந்தியத் தரப்பில் ரவிகாந்த் சிங் 9 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார். கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வீழ்த்திய கமல் பாஸி, இந்த ஆட்டத்தில் 2 விக்கெட் எடுத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai