சுடச்சுட

  
  18spt8

  கான்பெர்ரா, ஆக.17: ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல்.

  ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் தீபிகா 11-5, 11-7, 12-10 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் அமந்தா சோபியை தோற்கடித்தார்.

  முன்னதாக அமந்தா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மூன்றாம் நிலை வீராங்கனையான ஜென்னி டன்காஃபை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  வெற்றி குறித்து தீபிகா கூறுகையில், "காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெதுவாகவே விளையாடினேன். ஆனால் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னதாகவே நல்ல பயிற்சி பெற்றிருந்தேன். அதனால் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாட முடிந்தது. அமந்தா முன் களத்தில் சிறப்பாக விளையாடுவார் என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே அவரை முன் களத்துக்கு வராத வகையில் பின் களத்திற்கு பந்தை அடித்தேன் என்றார்.

  அரையிறுதியில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் லாரா மசாரோவுடன் விளையாடவிருப்பது குறித்துப் பேசிய தீபிகா, "லாராவுடன் விளையாடுவது மிகச்சிறந்த ஆட்டமாக இருக்கும். கடைசியாக லாராவுடன் விளையாடிய ஆட்டத்தில் மிக அருகில் சென்று வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

  ஆனால் அரையிறுதியைப் பொறுத்தவரையில் அது புதிய நாள். லாரா முன்னணி வீராங்கனை மட்டுமல்லாது, அனுபவம் வாய்ந்த வீராங்கனையும்கூட. அதனால் அவருடனான ஆட்டம் சற்று கடினமானதாகவே இருக்கும். அதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  3 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட வந்தபோது தகுதிச்சுற்றில் விளையாடியே, பிரதான சுற்றுக்கு முன்னேறினன். கடந்த ஆண்டு முதல் சுற்றில் தோல்வி கண்டேன். ஆனால் இந்த முறை தரவரிசையில் 11-வது இடத்தோடு, அரையிறுதி வரை முன்னேறியுள்ளது சிறப்பான ஒன்று.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai