சுடச்சுட

    
    18spt4

    சின்சினாட்டி, ஆக.17: அமெரிக்காவின் ஒஹியோவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி கண்டார்.

    வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் முர்ரே 4-6, 4-6 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜெர்மி சார்டியிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டத்தின் இரண்டாவது செட்டில் முர்ரே செய்த தவறுகள் அவரின் தோல்விக்கு முக்கியக் காரணமாயின.

    தோல்வி குறித்துப் பேசிய முர்ரே, "2-வது சுற்றில் சிறப்பாக விளையாடினேன். ஆனால் 3-வது சுற்றில் நன்றாக விளையாட முடியவில்லை.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே நிறைய தவறுகளை செய்துவிட்டேன். அதனால் ஏமாற்றமடைய நேர்ந்தது' என்றார்.

    காலிறுதியில் ஃபெடரர்: மற்றொரு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் பெர்னாட் டாமிக்கை வீழ்த்தினார்.

    இதன் மூலம் காலிறுதியை உறுதி செய்தார் ஃபெடரர்.

    கனடாவின் மிலஸ் ரயோனிக் 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சையும், அமெரிக்காவின் மார்டி பிஷ் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் ரடேக் ஸ்டீபானேக்கையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

    செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடிய ரஷியாவின் நிகோலாய் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியதால், ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மகளிர் பிரிவு: மகளிர் பிரிவில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோனி ஸ்டீபென்ûஸயும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் உர்ஸýலா ரத்வன்ஸ்காவையும், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ரஷியாவின் எலினா மகரோவாவையும், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சாரா எர்ரானியையும் வீழ்த்தி காலிறுக்கு முன்னேறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai