சுடச்சுட

  
  18spt7

  திருச்சி, ஆக. 17 : திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர் பி. அருள் செந்தில் தொடர்ந்து 5-வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றார்.

  திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 30 கல்லூரிகளைச் சேர்ந்த 70 பேர் பங்கேற்றனர். இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் பி. அருள்செந்தில் 6.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி மாணவர் எம். அஜ்மல் 2-வது இடத்தையும், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி மாணவர் ஜெ. விஜயகுமார் 3-வது இடத்தையும், புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரி மாணவர் ஆர். லட்சுமிகாந்த் 4-வது இடத்தையும், கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி மாணவி கே. வைஷ்ணவி 5-வது இடத்தையும், காவேரி மகளிர் கல்லூரி மாணவி டி. இந்துமதி 6-வது இடத்தையும் பிடித்தனர்.

  முதல் ஆறு இடங்களைப் பிடித்தவர்கள் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்பார்கள்.

  பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் சி.ஜெ. விஜயன் கனகராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai