சுடச்சுட

  
  18spt2

  புது தில்லி, ஆக.17: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

  வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமார், சுஷில் குமார், வெண்கலம் வென்ற ககன் நரங், யோகேஷ்வர் தத், சாய்னா நெவால், மேரி கோம் ஆகியோருக்கு பிரதமர் தனது இல்லத்தில் விருந்தளித்தார்.

  இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் சங்க தலைவர் (பொறுப்பு) விஜய் குமார் மல்ஹோத்ரா, பொதுச் செயலர் ரந்திர் சிங், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோருடன் வீரர், வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

  பாராட்டு: இதேபோல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

  இதில் மக்களவைத் தலைவர் மீரா குமார், விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கன், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வீரர், வீராங்கனைகளை பாராட்டினர்.

  விஜய் குமாருக்கு ரூ. 30 லட்சம்: துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராணுவ சுபேதார் மேஜர் விஜய் குமாருக்கு ரூ. 30 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி.

  விஜய் குமாரின் பதவி உயர்வுக்கு பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்று அந்தோனியிடம் கோட்டபோது, "இது தொடக்கமே, எதிர்காலத்தில் அவருக்கு நிறைய பதவிகள் வரும்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai