சுடச்சுட

  
  18spt6

  திருச்சி, ஆக. 17: திருச்சியில் நடைபெற்று வரும் மாநில சீனியர் ரேட்டிங் இறகுப்பந்து போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் நடிகை ஷாலினி - பிரியா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

  திருச்சி மாவட்ட இறகுப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் இப் போட்டி திருச்சி அண்ணா நகரில் உள்ள உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை தொடங்கியது.

  இப் போட்டியில் தமிழகம் முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆடவருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள், மகளிருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டி நடைபெறுகின்றன.

  வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் போட்டியில் நடிகை ஷாலினி - பிரியா ஜோடி 21-5, 21-4 என்ற நேர் செட்களில் திருச்சி லேகா - ஓவியா ஜோடியை வென்றது.

  சனிக்கிழமை காலை மாற்றுத் திறனாளி வீரர்களுக்கான போட்டிகள் மற்றும் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai