சுடச்சுட

    

    லார்ட்ஸ், ஆக.17: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 309 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 87.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்திருந்தது.

    இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் பிலாண்டர் அரை சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் அரைசதம் இது.

    இதன்பிறகு ஸ்டெயின் 26, மோர்ன் மோர்கல் 25 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டாக பிலாண்டர் 61 ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸ் 309 ரன்களில் முடிவுக்கு வந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டீவன் ஃபின் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இங்கிலாந்து தடுமாற்றம்: பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஸ்டிராஸ் 20 ரன்களில் மோர்கல் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

    இது அவருக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். கேப்டனாக அவர் விளையாடும் 50-வது போட்டி.

    இதன்பிறகு டிராட் 8, குக் 7, டெய்லர் 10 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 49.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது. இயான் பெல் 38, பேர்ஸ்டோவ் 42 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்கல், ஸ்டெயின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai