சுடச்சுட

  
  spt3

  கான்பெர்ரா, ஆக.18: ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் தோல்வி கண்டார்.

  சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள தீபிகா பலிக்கல் 7-11, 11-7, 11-13, 11-3, 9-11 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் லாரா மசாரோவிடம் தோல்வி கண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-11 என்ற கணக்கில் இழந்த தீபிகா, 2-வது செட்டை 11-7 என்ற கணக்கில் கைப்பற்றினார். மூன்றாவது செட்டை லாராவும், 4-வது செட்டையும் தீபிகாவும் கைப்பற்ற ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. வெற்றியைத் தீர்மானிக்கும் 5-வது செட்டில் தீபிகா கடுமையாகப் போராடியபோதும், அவரின் தோல்வி தவிர்க்க முடியாததானது.

  இந்தப் போட்டியில் தோற்றாலும், ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தீபிகா. 20 வயதாகும் தீபிகா பலிக்கல், ஜூனியர் பிரிவில் ஜெர்மன் ஓபன், நெதர்லாந்து ஓபன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், ஸ்காட்டிஷ் ஓபன் ஆகியவற்றில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai