சுடச்சுட

    
    spt4

    ஒஹியோ, ஆக.18: சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.

    ஆஸ்திரேலியாவின் ஒஹியோவில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ûஸ வீழ்த்தினார்.

    இதன்மூலம் செரீனாவின் தொடர் வெற்றியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் கெர்பர். செரீனா தொடர்ந்து 19 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆட்டத்தில் சீனாவின் லீ நா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் ஃபெடரர்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறினார். வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதியில் ஃபெடரர் 6-3, 7-6 (4) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மார்டி பிஷ்ஷை வீழ்த்தினார்.

    அரையிறுதியில் சக நாட்டு வீரரான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவைச் சந்திக்கிறார் ஃபெடரர். வாவ்ரிங்கா தனது காலிறுதிச் சுற்றில் 2-6, 7-6 (5), 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலஸ் ரயோனிக்கை வீழ்த்தினார்.

    இந்தப் போட்டியில் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில், இந்த ஆண்டில் அவர் வெல்லும் 6-வது பட்டமாக இது அமையும். ஒட்டு மொத்தத்தில் இதுவரை அவர் 75 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆர்ஜென்டீனாவின் ஜுவன் மார்ட்டினும் மோதுகின்றனர்.

    முன்னதாக காலிறுதிச் சுற்றில் ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சையும், ஜுவன் மார்டின் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜெர்மி சார்டியையும் வீழ்த்தினர்.

    அரையிறுதியில் பூபதி-போபண்ணா

    ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா ஜோடி.

    இந்த ஜோடி தங்களின் காலிறுதிச் சுற்றில் 6-4, 3-6, 10-8 என்ற செட் கணக்கில் போலந்தின் மரியஸ் பிர்ஸ்டன்பெர்க்-மார்சின் மட்கோவ்ஸ்கி ஜோடியை வீழ்த்தியது.

    பூபதி-போபண்ணா ஜோடி தங்களின் அரையிறுதிச் சுற்றில் குரோஷியாவின் இவான் டோடிக்-பிரேசிலின் மார்செலோ மெலோ ஜோடியை சந்திக்கிறது. டோடிக் ஜோடி தங்களின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டீபானேக் ஜோடியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai