சுடச்சுட

    

    லார்ட்ஸ், ஆக.18: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 315 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடைபெற்று வரும் இப் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 101.2 ஓவர்களில் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி 315 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்வான் 37 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்ன் மோர்கல், ஸ்டெயின் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். பிலாண்டர் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 2-வது இன்னிங்ûஸ ஆடிய தென் ஆப்பிரிக்கா 24.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. ஆல்விரோ பீட்டர்சன் 24, ஆம்லா 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai