சுடச்சுட

  

  லார்ட்ஸ், ஆக.19: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 325 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

  தென் ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது.

  இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடைபெற்று வரும் இப் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 101.2 ஓவர்களில் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து 107.3 ஓவர்களில் 315 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  இதையடுத்து 2-வது இன்னிங்ûஸ ஆடிய தென் ஆப்பிரிக்கா 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.

  4-வது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் ஸ்டெயின் 9 ரன்களில் வீழ்ந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஆம்லா சதமடித்தார். அவர் 121 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டீவன் ஃபின் பந்துவீச்சில் போல்டு ஆனார். டிவில்லியர்ஸ் 43, ருடால்ஃப் 11 ரன்களில் வீழ்ந்தனர்.

  தென் ஆப்பிரிக்கா 116.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது. டுமினி 23, பிலாண்டர் 30 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

  இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன் ஃபின் 4 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai