சுடச்சுட

  

  புது தில்லி, ஆக.19: தேசிய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சன்னி தாமஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

  19 ஆண்டுகள் அவர் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவரது பயிற்சிக் காலத்தில் இந்திய அணி 4 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது. தாமஸ் தனது ராஜிநாமா கடிதத்தை தேசிய ரைபிள் சங்கத்திடம் அளித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் கூறுகையில், "19 ஆண்டுகள் இப் பதவியில் இருந்துவிட்டேன். இப்போது அதிலிருந்து விலகுவது என்று முடிவெடுத்துள்ளேன். இருப்பினும் துப்பாக்கி சுடுதலில் இருந்து முழுமையாக விலகிவிடமாட்டேன்' என்றார்.

  இவரது பயிற்சியின் கீழ் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (ஆடவர் டபுள் டிராப் பிரிவு) வெள்ளியும், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபிநவ் பிந்த்ரா (10 மீ. ஏர் ரைபிள்) தங்கமும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் விஜய் குமார் (25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல்) வெள்ளியும், ககன் நரங் (10 மீ. ஏர் ரைபிள்) வெண்கலமும் வென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai